புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (12-03-2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினை உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றிருந்தது.
அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்ட்டிருந்தது
இந்நிலையில் நேற்று (12-03-2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை மட்டக்களப்பில் வைத்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுட்டுள்ளார்

