அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தோட்டை பகுதியில் இன்று மாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை,
அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

