அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10-03-2025) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக கல்நேவ பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தில் உள்ள பிரதான சந்தேக நபரின் வீட்டை இன்று சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (13-03-2025) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதவானின் உத்தரவின் கீழ் 48 மணிநேரம் தடுப்பு காவலில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

