உலகம் புதியவை வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் மீட்க சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர்.

அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை.

இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை பால்கன்-9 ரொக்கெட்டில் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.
இதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷிய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றனர்.
இந்த விண்கலம் இன்று காலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
அதில் இருந்து விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.

அவர்களை அங்கிருக்கும் வீரர்கள் வரவேற்றனர்.
வருகிற 19-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர்.
அதேவேளையில் வானிலை இடையூறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்