இந்தியா சினிமா

பிரபாஸ் நடிக்கவிருந்த சலார் 2 திரைப்படம் தொடங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘சலார்’ படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி ‘ஹிட்’ அடித்தது.

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பிரபாசுக்கு ‘கம்பேக்’ படமாகவும் அமைந்தது.

‘சலார்’ படத்தின் 2-ம் பாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த படம் தள்ளிப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் ‘தி ராஜாசாப்’ படத்திலும், முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் ‘கண்ணப்பா’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து ‘ஹனு-மான்’ படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க போவதாகவும், இதன் காரணமாகவே ‘சலார்-2’ படத்தை அவர் தள்ளிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘சலார்-2’ படம் தள்ளிப்போனதற்கு படக்குழுவினருடன், பிரபாசுக்கு தகராறு என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிப்பு

ஆனமடுவ வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.   ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன
சினிமா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ்,