உலகம்

அமெரிக்க மற்றும் ரஸ்சிய ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.

ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் கூறும் போது சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ள நிலையிலும் ரஷியா போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை.

ஒருப்பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனுடன் விரைவான போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் ரஷிய ஜனாதிபதி புதின் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்