உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி மீனவர்களுக்கிடையே தொடரும் முறுகல் கைகலப்பாக மாறும் சாத்தியம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்றும் முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்துவருகின்றார்.

இதனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது.

வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கேவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது.

ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னரே வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றார்.

அதிகாலை 06.00 பிறகே கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் இவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

இதனால் பாதிப்படைந்த மீனவர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கடற்தொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்க தவறுவதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்