உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீதான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த புதின் ஒப்புதல்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன.
இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது.
ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது.
சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய ஜனாதிபதி புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:-

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார்.

அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்.

போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.

ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்கப்படும்.

உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷிய ஜனாதிபதி புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்