உலகம் வணிகம்

அமெரிக்க மீது இந்தியா விதிக்பும் இறக்குமதி வரியை இந்தியா குறைக்குமென டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அத்துடன் இந்தியா அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கிறது என தெரிவித்த அவர் எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என குற்றம் சுமத்தினார்
டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.
அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஏப்ரல் 2-ம் தேதி தொடக்கம் இந்தியா அமெரிக்காவிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை அமெரிக்காவும் இந்தியாவிடம் வசூலிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழு இன்று (03) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளது.   ஜனாதிபதி செயலகத்தில் இந்த
வணிகம்

பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர் ஹரேந்திர திசாபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் கூட்டக நிறுவன ஆளுகையின் பேராசிரியரான