கனடாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சாரதிகள், காலாவதியான சாரதி உரிமத்துடன் வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது
மிகைப்படுத்திக் கூறவில்லை எனவும், கேமராக்கள் மூலம் இந்த ஓட்டுநர்களைப் பிடிப்பதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரி மைக்கேல் பாதி தெரிவித்துள்ளாhர்
பெரும்பாலான ஓட்டுநர்கள் உரிமம் காலாவதியாகி விட்டதை அறிந்துகொள்ளவே இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2021 நவம்பரில், ஒண்டாரியோ மாகாண அரசு மின்னஞ்சல்ஃதொலைபேசி அறிவிப்புகளுக்கு மாறி, அச்சில் (Pயிநச ஆயடை) அனுப்பும் உரிம புதுப்பிப்பு அறிவிப்புகளை நிறுத்தியது.
இதன் விளைவாக, பலர் தங்கள் உரிமம் எப்போது காலாவதியாகிறது என்பதையே கவனிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வுhகன ஓட்டுநர்கள் அதிக நேரம் செலவிடும் விடயம், எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு போன்றவையே ஆகும் ஆனால், உரிமத்தின் காலாவதி திகதி பார்ப்பதில்லையென என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

