கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள் சழரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்
இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தரகர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகைலே போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
சர்வதேச நாணய நிதியம் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மக்களின் ஆணையை அப்பட்டமாக மீறும் ஒரு அரசாங்கம் நாட்டில் உள்ளது.
ஏற்றுமதி மேம்பாடு இன்றியமையாத விடயமாக எள்ளது
அதன் மூலம் தொழில்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அதன் பலன்களை நாடு பல வழிகளில் பெற்றுக்கொள்ளும் .அதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.
எமது நாட்டுக்கு அதிக சதவீத முதலீடும், முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமும் தேவை.
அரசாங்கத்திற்கு அப்படியொரு விடயம் இருக்குமானால் அதனை முன்வைக்கவேண்டும் என சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டிபோட்டு முந்திச்சென்று அதிக முதலீடுகளை நம் நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வேலைத்திட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்ற போதிலும் அரசாங்கத்திடம் அவ்வாறான வேலைத்திட்டம் இல்லையென சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்
35,000 பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படாதது ஐ.எம்.எப் இன் ஆலோசனைகளை பின்பற்றுவதனாலா? எரிபொருள் நிவாரணம் பெருமளவில் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் அது இன்னும் கிடைக்கவில்லை.
இந்த நாட்டின் உயர்மட்ட பணக்காரர்களைத் தவிர்த்து சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டும் என சஜித் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்

