முக்கிய செய்திகள்

நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றி

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.

நாணய சழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது.
3-வது வீரராக களம் இறங்கிய மார்க் சாப்மேன் 44 பந்தில் 94 ஓட்டங்கள் விளாச நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 205 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் ஆட்டத்தை தொடங்கியது.
முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்
பந்தை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.
பாகிஸ்தான் 5.5 ஓவரில் 74 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது முகமது ஹாரிஸ் 20 பந்தில் 41 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து அணித் தலைவர் சல்மான் ஆகா களம் இறங்கினார்.
பாகிஸ்தான் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்கள் குவித்தது.

ஹசன் நவாஸ், சல்மான் ஆகா ஜோடியும் அற்புதமாக விளையாடியது.
8.1 ஓவரில் பாகிஸ்தான் 100 ஓட்டங்கள் கடந்தது.
இறுதியில் பாகிஸ்தான் 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
4-வது போட்டி எதிர்வரும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல