டொரொண்டோ பொலிசாரின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஊழடடநபந ளுவசநநவ இல் உள்ள டுநளடநை டு. னுயn மருந்தியல் கட்டிடத்திற்கு வெளியில் இன்று நடைப்பெற்றுள்ளது
ஆரம்பத்தில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியதல்ல என்று பொலிசார் தெரிவித்திருந்தபோதிலும், பின்னர் இது ஒரு கொலை என உறுதி செய்துள்ளனர்.
மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தாலும், யாரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் அல்லது சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்படவில்லை.
டொரொண்டோ பொலிசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

