இந்தியா உலகம்

தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

 

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும்.
இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன.

எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர்.

கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்