அனுராதபுர வைத்தியசாலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே பிரதான சந்தேக நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வைத்தியர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், இரண்டாவது நாளாக அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

