உள்ளூர் முக்கிய செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்த குற்றத்திற்கே சவேந்திர டி சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வா

சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் சவேந்திர சில்வா சம்பந்தப்பட்ட நபராகும்.

சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக செயற்பட்டார்,

இக்காலப்பகுதியி;ல் 58வது படைப்பிரிவினர் சட்டவிரோத படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்ட சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளை தனது படையினர் சுட்டுக்கொன்றவேளை போர் முன்னரங்கிலேயே இருந்தார் என பிரிட்டனின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்