நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் ; 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் 29 ஓட்டங்களும் ரியான் பராக் 25 ஓட்டங்களும் சஞ்சு சாம்சன் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஸஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ஓட்டங்களிலும், அணித் தலைவர் ரகானே 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்
3வது விக்கெட்டுக்கு டி காக், ரகுவனஸ்ஷி ஜோடி சேர்ந்தது.
டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டி காக் 97 ஓட்டங்களுடனும் ரகுவன்ஸஷி 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்
ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.