கொழும்பு – கோட்டையில் உள்ள கிரிஸ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் சுஜீவ நிஸங்க இன்று அறிவித்துள்ளார்.
குpரிஸ் கட்டிடம் தொடர்பான வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன திறந்த நீதிமன்றத்துக்கு இன்றைய தினம் காலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிரிஸ் கட்டிடம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த இரண்டாவது நீதவானான சுஜீவ நிஸங்கவும் குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து விலகுவதாக தற்போது தெரிவித்துள்ளார்.

