இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்; நிர்வாகச் செயலாளரான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்தார்
யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணத்தை அறிய முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.

