கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
அதன் பிரகாரம், நாளை தொடக்கம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

