வேலையில்லா(பட்டதாரிகளின்) பிரச்சினைக்கு வருகிறது தீர்வு!
வேலையில்லாப் பட்டதாரிகள் என்று வீதியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்போரில் பெரும்பாலானோர் கலைத்துறைப் பட்டதாரிகளே.
கலைத்துறையில் படித்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் முடித்தோருக்கே இந்த நிலை என்றால் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதோரின் நிலை…?
பல்கலைக்கழகம் கிடைத்ததோ இல்லையோ தொழில் ஒன்றை உறுதிப்படுத்தும் வகையில் உயர்தரம் கற்கும் காலத்திலேயே மாணவர்களை தயார்ப்படுத்தி வலுவூட்டும் எமது திட்டம் இது.
உங்கள் ஆதவையும் மேலதிக கருத்துப் பரிமாற்றங்களையும் எதிர்பார்க்கிறோம்!
15 வருடங்களுக்கு மேற்பட்ட சிகரம் நிறுவனம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கல்வி-தொழில் வழிகாட்டி சேவை அனுபவம் பல்துறைசார் அறிமுகங்களுடன் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி
கலைத்துறை என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் மானுடப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகள் தொடர்பான சிகரம் நிறுவனத்தின் புத்தாக்க முயற்சி!
வெறுமனே தனித்து அல்லது எழுந்தமானமாக 3 பாடங்களைக் கற்காமல்
தொழில் குறிக்கோள் ஒன்றுடன் அதற்குப் பொருத்தமான 3 பாடங்களைத் தெரிவுசெய்து கற்கும் முற்றிலும் புதிய அணுகுமுறை.
பல்கலைக்கழக அனுமதி பட்டக்கல்வி என்ற எல்லைகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல்
தொழில்வாயப்பொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் திறன்களையும் சமாந்தரமாக வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு.
15 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி-தொழில் வழிகாட்டி அனுபவத்துடன்
பல்துறைசார் அனுபவம் தொழில்முனைவுக்கான விருதுபெற்ற ஆளுமையுடன் முன்னெடுக்கப்படும் தனித்துவமான முயற்சி.

mathi
March 29, 2025அருமை
ahi
March 29, 2025எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்
நன்றி ருயாங்கன் சார்
முகுந்தன்
March 29, 2025மகிழ்ச்சியான விடயம்
எங்கட பொடியள் பெட்டையளுக்கு அரியதோர் வாய்ப்பு
Shanmuganathan
March 29, 2025Rusangan continue his work of providing quality service
gowri
March 29, 2025Thanks Rusangan