உள்ளூர்

எதிர்க்கட்சியிலிருந்த போது போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கின்றார்கள்- சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டங்களை விரட்டியடித்து தாக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2ஃ3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் பதிலையும் எதிர்பார்த்தாலும், இந்த அரசாங்கம் எந்த வேலையும் செய்ய முடியாமல் பொய், தவறாக வழிநடத்துதல், ஏமாற்றுதல், பிரச்சினைகளைத் தவிர்ப்பது போன்றவற்றைத் தொடர்ந்து வருகிறது.
மின்சாரம் தடைபடுவதற்கும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கும் குரங்குகள் காரணம் என அரசு தெரிவிக்கின்றது

நாய்களே சோறு உண்பதும், நாட்டு மக்கள் தோங்காய் சம்பலையும் சோற்றையும் அதிகமாக உண்பதுமே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என தெரிவித்திருக்கின்றனர்.
உணவும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இவை பொறுப்பற்ற பேச்சுக்கள் ஆகும். இவை மக்கள் ஆணையை குறைமதிப்பிற்குட்படுத்தும் பேச்சுக்களாகும்.
இவ்வாறு பொறுப்பற்ற சில்லறத்தனமான பதில்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். மூன்று வேளை போக, ஒரு வேளையும் சாப்பிட முடியாத மக்களும் காணப்படுகின்றனர்.
இது தவிர உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பொருட்களுக்கு மேலும் வரிக்கு மேல் வரி அறவிடுகின்றனர்.
மறுபுறத்தில் வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க அபிவிருத்தி உத்தியோகத்தகர்கள் கடமையில் ஈடுபட்டனர்.
கல்வி அமைச்சுக்கு முன்பாக இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, அவர்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களின் ஸ்தாபகர்களாக இருந்த தற்போதைய ஆளுந்தரப்பினர் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றை தடை செய்ய முற்பட்டு வருகின்றனர்.
ஜனநாயக உரிமைகளுக்காக குரல் எழுப்பிவதும் இப்போது தவறாக பார்க்கப்படுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்