உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவை தாக்க தயாராகும் ஈரான்!

டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் குறித்த செய்தியை வெளியிட்டு உள்ளது.

அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐ.நா. சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

மேலும் அந்நாட்டின் மீது 2- வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

டிரம்பின் இந்த பகிரங்க மிரட்டல் ஈரானை கொதிப்படைய செய்துள்ளது. அவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் பணியவில்லை.

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கும் மறுத்து விட்டது. மாறாக அமெரிக்காவுக்கு எதிராக அதி நவீன ஆயுதங்களுடன் ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஈரான், நாடு முழுவதும் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக்கிடங்கை தயார் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. கெய்பர், ஹேகான், ஹக் காசெம், செஜ்ஜில், எமாத் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான வீடியோக்களை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்>கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள மியன்மார் மக்கள்!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்