செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் மாற்றி விநியோகித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் அனுராதபுர துணைப் பிரிவினரால் சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

