இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என தொழில் அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (8-04) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அமெரிக்காவின் புதிய வரி கொள்கை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஜனாதிபதி அமெரிக்காவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வெள்ளை மாளிகை அந்த கடித்ததை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி தனது கடிதத்தில், வரி விதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் ஜனாதிபதி கோரியுள்ளார்.
புதிய வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

