சர்வதேச கிரிகெட் பேரவையின் சார்பில் டபிள் யுடிசி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் புள்ளிகள் நடைமுறையில் மாறுதல் கொண்டு வரப்பட உள்ளது.
அடுத்த கட்ட டபிள் யுசி போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரக்பி யூனியனில் உள்ளதைப் போல் டபிள்யு டிசியிலும், எதிரணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்பட உள்ளன.
ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.
தற்போதைய முறைப்படி வெற்றிக்கு 12,
டைக்கு 6, சமநிலைக்கு 4 புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என குற்றச்சாட்டு உள்ளது.இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் விளையாடாமலேயெ ஆடாமலேயே தற்போது டபிள்யுசி இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது
இது அணிகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மெதுவாக விளையாடுவதற்கு அதிக தொகை அபராதம் விதிக்கப்படுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை 2 பிரிவுகளாக பிரிக்காமல் தொடா்ந்து ஒரே லீக் ஆகவும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் தற்போது ஒரு இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும்.
இந்திய முன்னாள் அணித் தலைவர் ; கங்குலி தலைமையிலான குழு இதுதொடா்பாக பரிந்துரைத்துள்ளது.
பந்துகள் கடுமையாக உள்ளது,
துடுப்பாட்ட விரர்களுக்கு ஓட்டங்கள் குவிக்க வசதியாக உள்ளது என்ற முறைப்பாடு எழுந்துள்ளது.
இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
இதையும் படியுங்கள்>யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றிரவு மீண்டும் ஆரம்பம்