போதைப்பொருட்களுடன் கூடிய குறித்த படகை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிக்குக் கொண்டு வந்த பிறகு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே 6 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 50 வயதுக்குட்பட்ட தெனினலங்கையை சேர்ந்தவர்கள் ஆகும்.
சந்தேக நபர்களிடம் இருந்து 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 77 கிலோ 484 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றிரவு மீண்டும் ஆரம்பம்

