மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இம் மாதம் ; 3-ஆம் தேதியும், மாநிலங்களவையும் ஏப்ரல் 4-ஆம் தேதியும் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இம் மாதம் 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்
அதைத் தொடர்ந்து இந்தச் சட்டம் நாடு முழுமைக்கும் கடந்த 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன்பே, அதற்கு எதிராக காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ், ஆம் ஆத்மி, திமுக, இந்திய அக்ம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தரப்பில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு வழக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதையும் படியுங்கள்>அதிகாரம் திராவிடர்களின் கையில் இருப்பது மிகவும் கொடுமையானது!

