இந்தியா உள்ளூர் சினிமா

வீ.ஜே. பிரியங்கா திருகோணமலை மருமகளானார். இரா.சம்பந்தனின் மருமகனை கரம் பிடித்தார்

பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார்.
இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர

மேலும், இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார்.
அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.இலங்கை வாகன வாடகை
அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இவரின் முதல் கணவர்

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார்.

இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள்.

அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை.

பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்>உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிப்பு

ஆனமடுவ வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.   ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன
சினிமா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ்,