தற்போது நாடு கொலைகாரர்கள், கொள்ளையர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் என அனைவராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வத்தளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வீதிகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் கொலைகள் இடம்பெறுகின்றன.
கொலைகாரர்களால் ஆட்சி செய்யப்படும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
நாட்டில் முறையாக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதாகக் கூறியவருக்கே தற்போது வகுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகப் பெருந்தொகையாக கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும், இவற்றினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லவென அரசாங்கம் கூறி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>மொஹமட் ஷமியின் புதிய சாதனை!

