இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும் வெடிப்புக்கான காரணம் ஆபத்தான பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் இருக்கலாம் என்று ஈரானிய சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் துறைமுகத்தின் உள்ள படகு முனையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்>80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

