அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது
கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் அழிக்கப்பட்ட தீர்ப்புக்கு மதிப்பளித்து தனது போக்கை மாற்றி தானாக முன்வந்து தமிழ்தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை அமைப்பதற்கு செயலாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது.
தமிழ்தேசிய பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் கொள்கையில் உறுதியானவர்களாகவும்,நேர்மையானவர்களாகவும் மக்களின் பார்வையில் தென்படுகின்றனர்.
அவர்களின் கொள்கை உறுதியும்,பேராட்டத்திறனும்,தேசியப்பற்றும் பாரிய கூட்டாக வளரும் என மக்கள் நம்புகின்றனர் என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது

