அகில இலங்கை தொடக்க மற்றும் இடைநிலை மேசைப்பந்தாட்டத் தொடர் கொழும்பு சென் தோமஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இத் தொடரில் யாழ்.சாம் கல்லூரி மேசைப்பந்தாட்டக் கழகத்தை சேர்ந்த 19 வயது மாணவர் ஆதித்திஜன் ஜாசிதரன் அவர்கள் தொடக்க மற்றும் இடைநிலை ஆகிய இரு பிரிவுகளிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் தொடக்க பிரிவின் இறுதிச் சுற்றில் கொழும்பு கொறிசன் கழகத்தை சேர்ந்த பினாரா என்பவருடன் பலப்பரீட்சை நடத்திய ஆதித்ஜன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 8ற்கு11 மற்றும் 7ற்கு11 எனும் புள்ளிகளின் அடிப்படையில் இழந்தார்.
இதனால் குறித்த பிரிவில் 2ஆவது இடத்தை பிடித்த ஆதித்ஜன் இடைநிலை பிரிவிலும் இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேசிய ரீதியில் நடைபெற்ற மேசைப்பந்தாட்டப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் தருணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>ஊழலை ஒழிக்க உறுதிமொழி – இன நல்லிணக்கத்துக்கும் அரசு உறுதிபூர்வம்: சபாநாயகர்

