அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்
இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும் என தெரிவித்துள்ளது.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது
மே3 ம் திகதி அமைதிக்காலம் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களிற்கான பிரச்சாரங்களில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
இது தேர்தல்விதிமுறைகளை நேரடியாக மீறும் செயலாகும்.
இது குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளது.
அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.
இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும்.
பிரதமரின் இந்த உரை வீடியோவில் பதிவாகியுள்ளது,நாடு முழுவதும் இதுஒளிபரப்பாகியுள்ளது. பொறுப்புகூறல் இடம்பெறுமா?
நாட்டின் நிறைவேற்றதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர் சட்டத்தினை மீறுமாறுகோருவது,இது ஒரு அரசியல் சம்பவம் மாத்திரம்,இது அமைப்புமுறை மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தமாகும்.
பொதுமக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உடனடிநடவடிக்கைகள் அவசியம்

