உள்ளூர்

கொழும்பில் உயிர்மாயத்த மாணவி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் சி.ஐ.டியில் முறைப்பாடு!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றுமொரு நபரான தனியார் வகுப்பு ஆசிரியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று  (09-05) முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தனியார் வகுப்பு ஆசிரியர் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனியார் வகுப்பு ஆசிரியர் ,

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டிருந்தார்.

உயிரிழந்த மாணவி ஜனவரி 18 ஆம் திகதி எனது தனியார் வகுப்பில் இணைந்தார். முதல் வாரத்தில் மாணவி திடீரென சுயநினைவை இழந்தார்.
இதன்போது மாணவிக்கு முதலுதவி அளித்து, அவருடைய தந்தையை அழைத்து அவருடன் அனுப்பி வைத்தேன்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.
பின்னர் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து. மாணவிக்கு முதலுதவி அளித்து, தந்தையுடன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.
மூன்றாவது வாரத்தில், மாணவி அசாதாரண நடத்தையை வெளிப்படுத்துவதை அறிந்ததாக ஆசிரியர் கூறினார்.
அவர் செய்த ஒரு கண்காணிப்பின் போது மாணவியின் அசாதாரண நடத்தையை கவனித்து அவள் ஏன் தனியாக இருக்கிறார் என்று கேட்டேன்.
நான் அவரது அம்மாவை அழைத்தேன். பிரதான மண்டபத்திற்குச் சென்று, அங்கே காத்திருந்து அவருடைய அம்மாவிடம் பேசினேன்..
இந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவருடைய அம்மாவிடம் விளக்கினேன்.

சமூக ஊடகங்களில் பரவிய ஒரு அறிக்கையில், ‘நான் வகுப்பறைக்குச் சென்று, மாணவியை எழுப்பி, அவருடைய பெயரைச் சொல்லி, உன் பாடசாலையில் உனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, அதனால் நீ வகுப்பிற்கு வருவதை நிறுத்த வேண்டும்’ என்று சொன்னேன் என கூறப்படுகிறது. அது என் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டு என்றும் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் வகுப்பறைக்கு சென்றதில்லை.
உண்மையில், நான் வகுப்பறைகளுக்கு அருகில் கூட செல்வதில்லை. ‘ஒரு வகுப்பறையில் ஐந்து மாணவர்கள் இருந்தாலும், நான் உள்ளே சென்று மாணவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

சம்பவம் நடந்து 13 நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

உண்மை விரைவில் வெளிவரும். நான் இதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை, ஆனால் உண்மை வெளிவரும், என்று தனியார் வகுப்பு ஆசிரியர் கூறுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் அரசியல் என்று ஆசிரியர் கூறுகிறார்.
‘நான் ஒரு அரசியல்வாதி என்பதால் இவ்வளவு தாக்கப்படுகிறேன். கடந்த 6-7 நாட்களாக எனக்கு எந்த நிம்மதியும் இல்லை.
எனது அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் கொழும்பு பகுதியில் நான் ஒரு வெறுக்கத்தக்க நபராக மாற்றப்பட்டேன் என்றும் தனியார் வகுப்பு ஆசிரியர் கூறினார்.

தனது பின்னணியை விளக்கி, ஆசிரியர் கூறுகையில், அவர் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு வடக்கு அமைப்பாளராகவும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றுவதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 35,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக இருந்ததாகவும் கூறுகிறார்.

அவர் இதுவரை மாணவர்களுடன் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்றும், கல்வித் துறையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதற்காகக் கூட பாடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்