பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவியற்ற உலகலாவிய எடுத்துக்காட்டாக பிரகாசிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நக்பாவின் 77 வருடத்தை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எங்களின் மொபைல் சாதனங்களிற்குள் 24 மணிநேரமும் ஏழு நாட்களும் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்ட முதலாவது இனப்படுகொலையாக விளங்குகின்ற போதிலும்,இந்த படுகொலை 19 மாதங்களாக இடைநிறுத்தப்படாமல் தொடர்கின்றது.
இது நாங்கள் வாழும் காலத்தை பற்றியும் உலக ஒழுங்கிற்கும் அடிப்படையானவை என தெரிவிக்கப்படும் விதிமுறைகள் பற்றியும் என்ன சொல்கின்றது?
காசாவில் தற்போது நடைபெறும் அட்டுழியங்களின் அளவை அறிந்துகொள்வதற்கும் அறியாமல் இருப்பதற்குமான வித்தியாசம் இதுதான்.
கண்முன்னால் இடம்பெறும் இனப்படுகொலையின் தீவிர ஆதரவாளர்களாகயிருப்பதா அல்லது படுகொலையின் பார்வையாளர்களாகயிருப்பதா என்பதே எம்முன்னால் உள்ள தெரிவு.
நம்பகதன்மை மிக்க புகழ்பெற்ற லான்செட் போன்ற தரப்புகள் தெரிவிப்பதை விட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு மடங்காகயிருக்கலாம்.
கொல்லப்பட்டவர்களில் 18000 சிறுவர்களும்,200 பத்திரிகையாளர்களும் 400 நிவாரணபணியாளர்களும் 150 கல்விமான்களும் 1300 சுகாதார பணியாளர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
காசாவிலும் மேற்குகரையிலும் உட்கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது,பாலஸ்தீனியர்களின் கூட்டு தேசிய வாழ்க்கையின் அத்தியாவசிய அடித்தளத்தின் மீது திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தாக்குதலின் விளைவாகும்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு வாரமும் நீதி கோரியும் இந்த இரத்தகளறிக்கு முற்றுப்புள்ளிவைக்குமாறு கோரியும் வீதிகளில் இறங்கிவருகின்ற போதிலும் உலகம் அதிகார அச்சில் சுழன்றுகொண்டேயிருக்கின்றது.
ஆனால் இந்தக் குற்றவியல் தாக்குதல் முடிந்தவுடன் உலகம் மீண்டும் அதே நிலையில் இருக்குமா என்பதுதான் கேள்வியாகவுள்ளது. காசாவுக்குப் பிறகு விதிகளை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் சாசனம் முதல் உலக ஒழுங்கு வரை பொதுவான மனிதகுலத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது என்பதும் கேள்வியாகவே உள்ளது.
உலகின் வேறு பல இடங்களில் செய்தது போல,மன உறுதி வாய்ந்த பாலஸ்தீனிய மக்களை மிக இலகுவாக அகற்றக்கூடிய மனித தூசிகளாகவும் இடிபாடுகளாகவும் மாற்றியுள்ள சக்திவாய்ந்த நபர்களின்,குற்றவியல் மதிப்பீடுகள்,புவிசார் அரசியல் தந்திரோபாயங்களிற்கு நாங்கள் எப்போது முற்றுப்புள்ளிவைப்போம்?
செயலற்ற ஏற்றுக்கொள்ளலுக்கும்,ஆன்மா இல்லாத மௌனத்திற்கும் நம்மை உட்படுத்திக்கொள்ளுமாறு திணிக்கப்படும் அழுத்தத்தை எதிர்ப்பதற்காக நாங்கள் இந்த கேள்விகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டேயிருப்போம்.
இருப்பினும் உலகமே பார்த்திருக்க இந்த எல்லையற்ற கொடுமைகளை அனுபவித்து தனது மண்ணிலே பசியிலும் குண்டுவீச்சுக்களிலும் உயிரிழப்புக்களிலும் கண்ணீருடன் வாழ்ந்து வலிமையுடன் வாழும் பலஸ்தீன மக்களின் உறுதியான நிலைப்பாடு நியாயம் சகிப்புத்தன்மை கண்ணியமான வாழ்வு என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு புரியவைக்கும்.
குறைந்து வரும் ஒரு நிலத்தில் பட்டினியால் வாடும்வாடப்படும் குண்டுவீசப்படும் ஊனமுற்றோராக்கப்படும் மற்றும் படுகொலை செய்யப்படும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இந்த கொடூரங்களை எதிர்கொண்டு தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும் அடிபணிந்து வெளியேறமாட்டோம் என்றும் மறுப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதி மீள்தன்மை மற்றும் கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு மனிதர்களாகிய நமது புரிதலையும் தூண்டுகிறது
முதல் நக்பாவிலிருந்து தற்போதைய இனப்படுகொலை இரத்தக்களறி வரை ,சுதந்திரமாகயிருக்கவேண்டும் என்ற மனித விருப்பத்தின் சுடரை சுமக்கும் பாலஸ்தீனியர்கள்,உலகத்தையும் மனித குலத்தையும் மறுவடிவமைப்பார்கள்.
மனிதர்களாக உணரப்படுவதற்காக நாங்கள் ஏங்கிய, வேறுபட்ட உலகத்தை வேறுபட்ட விழுமியங்களை கனவுகளை அடைவதற்கான மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டு விருப்பத்தினை பாலஸ்தீனியர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள்.
அவர்கள் தகர்க்க முடியாத மனித விருப்பத்தின் கொடியாக மாறி,மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் மற்றும் மனித கௌரவம் பற்றிய கூட்டுகனவுகளை தூண்டும் நித்திய சுடர்களாக மாறிவிட்டனர்

