உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மறை மாவட்ட ஓய்வு பெற்ற ஆயர் நிரந்தரமாக இளைப்பாறினார்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இன்று இறைவனடி சேர்ந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று 74 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.

கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார்.
அன்னார் புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்று, திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், பூனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியிலமர்த்தப்பட்டார்.

இவர் பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.
மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலும் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

2008 பெப்ரவரியில் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை – ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.
அதன் பின்னர் 2012 இல் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஆயராக இவர் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்