ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் தொடங்கிய தொழிற்சாலை இன்று முற்றிலும் மூடப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
எதிர்காலத்தில் 2028 முதல் நாட்டின் கடனை திரும்ப செலுத்த 5மூ பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிதிச் சட்ட கட்டளைகள் மீதான விவாதத்தில் தெரிவித்தார்.
தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவதை கணக்கில் கொண்டு, 5மூ வளர்ச்சியை அடைவது கடினம் என்ற அவர், இவ்வாறு வளர்ச்சி விகிதம் நிலைநிறுத்தப்படவில்லை என்றால், கடன்களைத் திருப்பி செலுத்த இயலாமல் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு சென்று நாட்டில் பொருளாதார சுனாமி ஏற்படும் என எச்சரித்தார்.
அவர் குறிப்பிட்டதாவது:
நெக்ஸ்ட் தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர்கள், நாட்டில் பொருத்தமான பொருளாதார மற்றும் சமூக சூழல் இல்லாததால் இது மூடப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளது என்று ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதை அரசாங்கம் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்ததாவது
நெக்ஸ்ட் தொழிற்சாலை உரிமையாளரை உடனடியாக சந்தித்து கலந்துரையாடல் நடத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் 200 ஆடை தொழிற்சாலைகள் திட்டத்தில் அரசாங்கம் கடின காலங்களில் தலையீடு செய்து தொழிலாளர்களை பாதுகாத்ததை நினைவுபடுத்தி, இத்தகைய நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை முன்மொழிந்தார்.
மின்சாரக் கட்டணம் அரசாங்கத்தின் வாக்குறுதியின்படி 33மூ குறைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது 18மூ உயர்த்தப்படவுள்ளது. இதனால், ஐ.எம்.எப் ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விமர்சனம் செய்தார்.
படை வீரர்களின் நலன் மற்றும் அவர்களை நினைவுகூரும் நடவடிக்கைகள் வலுவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த காலங்களில் 34,000 சிவில் பாதுகாப்புத் துறை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அற்ப ஊதிய உதவிகளை உதாரணமாக எடுத்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய பாதாள உலகுடன் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பு குறித்து தேவையான சான்றுகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாட்டில் அதிகரிக்கும் கொலைகளுக்கு எதிரான அரசு நடவடிக்கை குறைவாக இருப்பதையும் வலியுறுத்தி, தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்தார். குறிப்பாக தக்காளி 1114மூ, காரட் 700மூ வரை விலை உயர்வானது பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது.
நாட்டில் தனிநபர் உப்பு நுகர்வு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை (5 கிராம்) விட அதிகமாக (9.2 கிராம்) உள்ளது. நாட்டின் உப்புத் தேவை மற்றும் உற்பத்தி பற்றிய கேள்விகளும் சயளைநன செய்தார்.
அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து, மக்கள் நம்பிக்கையை கையாள தவறவிட்டதாக குறிப்பிட்டார்.

