உள்ளூர் முக்கிய செய்திகள்

கோட்டாவுடன் டீல் பேசி வியாபாரத்தை ஆரம்பித்த தமிழர் நிறுவனத்தையே இழந்தார்

இலங்கையில் கோட்டாபே அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக எண்ணை இறக்குமதியில்இ கோடிக்கணக்கான ரூபாயை இழந்துள்ளதாகவும் தனது சொந்த நிறுவனத்தை கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்களை தமிழர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் எண்ணை இறக்குமதி செய்வதற்காக செய்து கொண்ட வியாபார ஒப்பந்தத்தினூடாக அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் மோசடி காரணமாக கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமானது புலம்பெயர் உறவுகளை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயேஇ கோட்டாபே ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் எண்ணை வியாபார ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக தான் பல கோடிகளையும் இ தன்னை அச்சுறுத்திய நிலையில் தனது நிறுவனத்தையும் இழந்துள்ளதாகவும்இ அதை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

காஸ்மீர் அன்று பிரான் கிறிஸ்டி ஆகிய நான்இ எனது நிறுவனமான A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd என்ற நிறுவனத்துடன் 01-07-2022 ஆம் ஆண்டு எண்ணை இறக்குமதிக்கான வியாபார ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டோம்.

எண்ணை இறக்குமதியின் போது ஓப்பந்தத்தின் பிரகாரம் A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd என்ற குறித்த நிறுவனமானது செயல்படாத காரணத்தினால் எனது நிறுவனத்தில் பதவி நிலைகளையோ அல்லது எனது நிறுவனத்தின் பங்குகளையோ நான் வழங்கியிருக்கவில்லை.

இருந்தபோதும் எனக்கு தெரியாமல் அதாவது உரிமையாளரான எனது அனுமதி இல்லாமல் மத்திய வங்கியானது உரிமையற்ற ஒப்பந்ததாரருக்கு சகல அனுமதிகளையும் 05-09-2022 அன்று வழங்கியிருந்தது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானதுஇ எனது நிறுவனத்தின் பெயரில் 01-08-2022 எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை வழங்கியிருந்தது.

ஆனால் எனது நிறுவனமான A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd இன் சட்டபூர்வமான அனுமதி இல்லாமலே சட்டவிரோதமாக எண்ணை இறக்குமதி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd நிறுவனத்தை சேர்ந்த ‘சொகான் கோரளைகே’ எனும் நபரை சட்டப்படி 22-09-2022 இல் தான் A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd என்ற எனது நிறுவனம் இணைத்துக் கொண்டது. ஆனால் குறித்த நபரின் பெயரில் ஒரு மாதத்திற்கு முன்னரே அதாவது (01-08-2022) ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் சட்டவிரோதமாக எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

ஊழசயட நுநெசபல என்ற டுபாயில் இயங்கும் நிறுவனம் ஒன்றின் மூலம் முதலாவது எண்ணை இறக்குமதியானது ஒரு கோடியே 7 இலட்சத்து 48 ஆயிரத்து அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொண்டபோது 25 பில்லியன் ரூபாவிற்கு நான்கு தடவைகளாக எண்ணை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என ஆவணங்கள் மூலமாக தெரியவந்தது.

A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd . நிறுவனமானது எனது நிறுவனமான A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படாத காரணத்தினாலும் எனக்கு நேரடியாக விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாகவும் எனது நிறுவனத்திலிருந்த பணிப்பாளர்கள் 19-04-2023 அன்று நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் ராஜினாமா செய்திருந்தோம் அன்றுடன் எனது நிறுவனமும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.

எனது நிறுவனமும் 01-07-2022 A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் எனக்கு ஊநுழு பதவியும்இ எண்ணை இறக்குமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் இலாப பங்கு 15 வீதம் வழங்குவதாக இருந்தபோதும்இ குறித்த நிறுவனமானது தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அச்சுறுத்தியும் எனக்கான உரிமைகளையும்இ அதிகாரத்தையும் வழங்கியிருக்கவில்லை.

அத்துடன் எனது நிறுவனத்தினூடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையானது எனது நிறுவனத்திற்கு உரியதாகவே இருந்தது.

எண்ணை இறக்குமதிக்கான பணப்பரிமாற்றம் ஆனது சட்டவிரோதமாக மோசடியான முறையில் எனது வங்கிக் கணக்கினூடாக அராப் சுவிஸ் வங்கி ஜெனிவா கிளைக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணை இறக்குமதி மோசடிக்கு டுபாய் நாட்டில் இயங்கும் இலங்கைத் தூதரகமும் துணைபோய் இருந்தது என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாக இருக்கின்றது.

திட்டமிட்ட இந்த ஊழல் மோசடி தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அங்கும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் NPP அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அத்துடன் 24-12-2024 இல் சட்டரீதியாக சிஐடி யில் மோசடி விசாரணை பிரிவில் முறையிட்டுள்ளேன்.

A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd என்ற மோசடி நிறுவனமானது என்னுடைய வியாபார ஒப்பந்தங்களை அரசியல் அதிகாரத்திலுள்ள மாபியாக்கள் மூலம் நேரடி மிரட்டலுடன் எனது நிறுவனத்தை பறித்து கொண்டதுடன் இ போலியான எண்ணை இறக்குமதி ஒப்பந்தங்களினூடாக கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததன் காரணமாக நானும் எனது நிறுவனமும் பல இலட்சம் டொலர்களை இழந்துள்ளோம்.

ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் புலம்பெயர் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றது. ஆனால் ஒரு நிறுவனமாக இலங்கையில் பதிவு செய்து எண்ணை இறக்குமதியில் அதிகாரபூர்வமான அனுமதியை பெற்றுக்கொண்ட எனது நிறுவனத்திற்கு எந்தவிதமான சட்டபாதுகாப்பும் இல்லை என்பதுடன் பெரும்பான்மை அரசியல்வாதிகள் முதலீட்டாளர்களையும்இ வியாபாரிகளையும் சட்டரீதியாகவும்இ அச்சுறுத்தியும் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது.

கோட்டாபே ராஜபக்ஷ ஆட்சியில் ஜனாதிபதி முதற்கொண்டுஇ அடிமட்ட நிறுவன அதிகாரிகள் வரை அனைவரும் சட்டரீதியாகவே என்னை ஏமாற்றினார்கள் என்பதே உண்மை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆனது ஊழலையும் இ ஊழல் வாதிகளையும் ஒழிப்போம் எனும் கோசத்துடன் பெரும்பான்மை மக்கள் பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் இ எனக்கான நீதி கிடைக்கும் என்றே நம்புகிறேன் என தெரிவித்தார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்