உலகம்

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் 50 வீதம் வரி விதிப்பு

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனக்கு சொந்தமாக ட்ரூத் சோசியல் சமூக ஊடக பதிவில், ‘ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனிடமிருந்து இன்று எனக்கு அழைப்பு வந்தது.

வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான 50மூ வரி மீதான ஜூன் 1 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரினார். ஜூலை 9, 2025 அன்று நீட்டிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.

பேச்சுவார்த்தைகள் விரைவாக தொடங்கும் என்று ஆணையத் தலைவர் கூறினார். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்