கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்
விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள விவசாய ஆராய்ச்சி பிரிவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 75க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியும் இந்த கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் இதுவரை தங்களுக்கான நிரந்தர நியமனத்தினை வழங்க வில்லை என்றும் தங்களது நியமனம் தொடர்பில் உரிய தரப்புகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

