கனடா பிரம்டனில் அமைந்துள்ள மே 18 நினைவு தூபிக்கு அருகில் உள்ள மின்குமிழ்களை முகத்தை மறைத்த இரண்டு நபர்கள் வந்து சேதப்படுத்தியுள்ளனர்
இநத நாசகார வேலை சம்பவம் நேற்று முன்;தினம் (27.05.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை கனேடிய பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
சம்பவம் நடைபெற்ற போது கிடைத்த சிசிடிவி காணொளிகளை வைத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை முடிவடையும் வரை எதனையும் உறுதியாக கூற முடியாத நிலை இருப்பினும், தூபி அமைக்கப்பட்ட போது அதற்கு எதிராக இருந்த பலர் மீது வெளிப்படையான கருத்துக்கள் முன்வைத்தவர்கள் தொடர்பி;ல் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது

