இடப்பெயர்வுகளுக்கான சர்வதேச அமைப்பின் ( IOM) பொறுப்பாளர் கிறிஸ்டின் பி. பார்கோவை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அண்மையில் கொழும்பில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மலையக தோட்டங்களில் இருந்து இடம்பெயரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயரும்போது, அவர்களுக்கு தேவையான வழிகாட்டலும், பாதுகாப்பும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பு, இடம்பெயருவோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முக்கியமானதொரு அடிப்படை முயற்சியாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்>புதிய கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது!

