இந்தியா உள்ளூர் சினிமா

‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

1999 முதல் 2000 வரை வெளியான ‘கதை நேரம்’ மற்றும் 56 குறும்படங்கள், ‘ஜூலி கணபதி’ திரைப்படம் போன்றவற்றில் பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்தார்.

மேலும் ‘பொல்லாதவன்’, ‘கொடிவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவுப் பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ளனர். அவரது உடல் தற்போது சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிப்பு

ஆனமடுவ வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.   ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன
சினிமா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ்,