நீங்கள் என்ன சொன்னாலும் எவ்வளவு பிழையான விடயங்களை தெரிவித்தாலும் உங்கள் சகோதரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது என ஊடகமொன்றிற்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்
இலங்கையின் ஊடகமொன்று தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலிற்காக ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார இது குறித்து எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சில ஊடகங்கள் ஊடகசுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் என்ன சொல்லாலும் உங்கள் சகோதரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது,எங்களிற்கு எதிராகவோ அல்லது தனிநபர்களிற்கு எதிராகவோ போலியான தகவல்களை பரப்புவதன் மூலம் உங்களிற்குபொதுமன்னிப்பு கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
உடல்நல பாதிப்பு எதுவுமில்லா போதிலும் ,ஒன்றரை வருடமாக அந்த அரசியல்வாதி மருத்துவமனையில் இருக்கின்றார் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கைதிகளையும் சமமாக நடத்தவேண்டும் என்பது குறித்து நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம், சுகாதார அமைச்சு நியமித்த 14 மருத்துவர்கள் கொண்ட குழு அந்த அரசியல்வாதிக்கு எந்த உடல்பாதிப்பும் இல்லை என்பதை கண்டுபிடித்தள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் அதன் பின்னர் அவரை சிறைச்சாலைக்கு மாற்றியமைத்ததாக தெரிவித்துள்ளார்.

