400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இன்று ரஷ்யர்களால் உக்ரைன் மீது ஏவப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இன்று ரஷ்யர்களால் ஏவப்பட்டன.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் நகரங்களில் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் நாள் முழுவதும் தொடர்ந்தன. 80 பேர் காயமடைந்தனர், சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டிப்பதில்லை. புடின் சரியாக இதைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்.
அவர் தொடர்ந்து போரை நடத்துவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றார்.
ரஷ்யர்கள் தங்கள் போருக்கான வலுவான அழுத்தத்தைத் தடுக்க, உலகின் ஒற்றுமையை நிலைகுலைக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.
கையில் உள்ள பணியை நாம் தெளிவாகக் காண வேண்டும். ராஜதந்திரம் செயல்பட வேண்டும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் உறுதி செய்யப்பட வேண்டும், அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதற்கு, ஆரம்ப நடவடிக்கைகள் தேவை, குறிப்பாக போர் நிறுத்தம் தேவை. அதைச் செய்ய ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும், தாக்குதல்களை நிறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

