யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

