அமெரிக்கா கடந்த வாரம் ஈரானின் அணு உள்கட்டமைப்புகளின் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் அந்த மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
‘ஈரானின் அணுத் திட்டம் மீண்டும் இயங்கவே இயலாத வகையில் அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேறு யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை’ என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை (Defense Intelligence Agency – DIA) தயாரித்த மதிப்பீட்டை மேற்கோளாகக் கொண்டு தாக்குதல்களால் ஈரானின் நிலத்தடியில் உள்ள முக்கிய அணு உள்கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும், வெறும் சில மாதங்களுக்கே திட்டங்களை பின்னடை யடைய செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை The New York Times, The Washington Post மற்றும் CNN ஆகியவை வெளியிட்டுள்ளன. அதில், பெயரிடப்படாத பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ‘ஈரானின் முக்கிய அணு மையங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டிருந்ததால், அமெரிக்காவின் குண்டுவீச்சு தாக்குதலால் அவை முற்றிலும் அழிவடையவில்லை. திட்டத்தின் செயல்பாடு சில மாதங்கள் மட்டுமே தடைபடும்.’
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் இதனை முற்றிலுமாக மறுத்து, ‘புலனாய்வு மதிப்பீடுகள் தவறாக இருக்கலாம். நாங்கள் எடுத்த நடவடிக்கை ஈரானின் அணுத் திட்டத்தையே அழித்துவிட்டது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிபர் டிரம்பின் இந்தக் கூற்றுகள், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் விவாதத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர், அவர் உள்நாட்டு அரசியல் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்தில் இவ்வாறு பேசுவதாகக் கூறுகின்றனர்

