நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.
நீதி நிலைநாட்டப்படாமல் இருத்தலானது சமாதானத்தின் நிலைபேறான தன்மையைப் பாதிக்கும்.
மாறாக என்ன நேர்ந்தது என்ற உண்மைகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவே நிலையான சமாதானத்தை நோக்கிய பாதையில் பயணிக்க முடியும் என அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (24-06) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கலந்துரையாடலில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மனித உரிமைகளே சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் முன்நோக்கிப் பயணிப்பதற்குமான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் நீண்டகால உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது நிலவும் சமாதானத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது அவசியம்.
உள்நாட்டு மோதல், தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த இலங்கை, தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், நல்வாழ்வுக்கான உரிமை உள்ளிட்ட சகல உரிமைகளையும் அழுத்தங்களின்றிப் பேண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
தற்போது இலங்கை தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டு பொறிகளுக்குள் சிக்கியிருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய வழிமுறைகளை இலங்கையர்கள் ஆராய வேண்டும்.
நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்
மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்
அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் என சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் ‘தீர்வுகளை நோக்கிய பாதையாக மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

