டொராண்டோ ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், டான் மில்ஸ் சாலை மற்றும் செயின்ட் டெனிஸ் டிரைவ் சந்திக்குமிடத்தில், எக்லிங்டன் அவென்யூ அருகே உள்ள பகுதியில், இன்று அதிகாலை 2 மணிக்கு முன் நிகழ்ந்துள்ளது.
17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள், உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் இருந்தாலும், மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை இதற்கான விசாரணையை தற்போது டொராண்டோ பொலிஸின்; குற்றவியல் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்>சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றுவிட்டனர்
